குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி - மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
17 JAN 2026 12:51PM by PIB Chennai
பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அவர்களது தனித்துவமிக்க தயாரிப்புக்களை காட்சிப்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் ஏதுவாக, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம், பிரத்யேக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, 2026, ஜனவரி 18 முதல் 31, 2026 வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது. இது காலை 10:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்திருக்கும். இந்தக் கண்காட்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே பங்கேற்கிறார்.
இந்தியாவின் வளமான பாரம்பரிய கைவினைத்திறனைப் போற்றும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்கள் தங்களது தயாரிப்புகளை தேசிய, சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்கள், துறை சார்ந்த பிரிவினர் மற்றும் பொதுமக்களிடம் காட்சிப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் முக்கிய தளத்தை வழங்குகிறது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 117-க்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர். பல்வேறு பாரம்பரிய திறன்கள், கைவினைப் பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அகில இந்திய அளவிலான தலமாகவும் இந்தக் கண்காட்சி அமைகிறது. இது பிரதமரின் கைவினைக் கலைஞர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளிகளுக்கு சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தவும், அவர்களது தயாரிப்புகளுக்கான அங்கீகாரத்தை அதிகரிக்கவும், நிலையான வாழ்வாதார வாய்ப்பு உருவாக்கத்திற்கான முன்முயற்சியாகவும் அமைந்துள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக வெளிநாட்டுத் தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215543®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2215552)
आगंतुक पटल : 19