நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் வணிக தளங்களில் அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

प्रविष्टि तिथि: 16 JAN 2026 2:37PM by PIB Chennai

மின்னணு வணிக தளங்களில் பெரிய அளவில் சட்டவிரோத வாக்கி-டாக்கிகள் (பெர்சனல் மொபைல் ரேடியோ - பிஎம்ஆர்) பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ ) தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், தொலைத்தொடர்பு விதிகள் ஆகியவற்றை மீறியதற்காக முன்னணி இணையதள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தளங்களில் 16,970-க்கும் மேற்பட்ட இணக்கமற்ற வாக்கி-டாக்கிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட், மெட்டா (ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ்), டாக் ப்ரோ, சிமியா, மாஸ்க்மேன் டாய்ஸ், இந்தியா மார்ட், டிரேட்இந்தியா, அன்ட்ரிக்ஷ் டெக்னாலஜிஸ், வர்தான்மார்ட், கிருஷ்ணா மார்ட் ஆகிய 13 மின்வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சட்டப்பூர்வ ஒப்புதல்கள் இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட, உணர்திறன் வாய்ந்த வாக்கி-டாக்கிகள், பல தளங்களில் விற்பனை  செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய தகவல்களை வழங்காமலேயே நுகர்வோருக்கு இவை விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த சாதனங்களில் பல, உயர் அதிர்வெண்ணில் இயங்குவது கண்டறியப்பட்டது. இது காவல்துறை, அவசர சேவைகள், பேரிடர் மீட்பு முகமைகள், பிற முக்கியமான தகவல் தொடர்புகளால் பயன்படுத்தப்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அலைக்கற்றை வரிசை ஆகும். பல தயாரிப்புகள் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றின் பயன்பாட்டிற்கு அரசு ஒப்புதல் தேவை.

மீஷோ, பிளிப்கார்ட், அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 10 லட்சமும், சிமியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ, மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. பல தளங்கள் அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளன. வாக்கி-டாக்கிகள், பிற ரேடியோ உபகரணங்கள் தேவையான அரசு ஒப்புதல்கள் இல்லாமல் பட்டியலிடப்படவோ அல்லது விற்கப்படவோ கூடாது என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து தளங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கும், பாதுகாப்பான, வெளிப்படையான டிஜிட்டல் சந்தையை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான இறுதி உத்தரவு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் இந்த இணையதளத்தில் கிடைக்கிறது: https://doca.gov.in/ccpa/orders-advisories.php?page_no=1    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215261&reg=3&lang=1

***

TV/PLM/RK/SE


(रिलीज़ आईडी: 2215398) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Kannada