பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தில் ஜனவரி 17-18 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 1:55PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 17-18 தேதிகளில் மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்கிறார்
ஜனவரி 17 அன்று, மதியம் சுமார் 12:45 மணியளவில், மால்டாவிற்கு செல்லும் பிரதமர், ஹவுரா - குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் சுமார் 1:45 மணியளவில், மால்டாவில் நடைபெறும் பொது நிகழ்வில், ரூ. 3,250 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்; நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
ஜனவரி 18 அன்று பிற்பகல் 3 மணியளவில், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் சுமார் ரூ. 830 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
மால்டாவில் பிரதமர்
மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
மால்டா நகர் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஹவுரா - குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைப்பார். குவஹாத்தி (காமாக்யா) - ஹவுரா இடையே, தூங்கும் வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலையும் அவர் மெய்நிகர் முறையில் கொடியசைத்து தொடங்கி வைப்பார். இந்த ரயில் ஆன்மிக பயணம் மற்றும் சுற்றுலாவிற்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
மேற்கு வங்கத்தில் பாலுர்காட் - ஹிலி இடையேயான புதிய ரயில் பாதை உட்பட நான்கு பெரிய ரயில் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டங்கள், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளை வலுப்படுத்தும், வடக்கு வங்கத்தில் தளவாட செயல்திறனை மேம்படுத்தும், இப்பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும் 4 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிரதமர் மெய்நிகர் முறையில் கொடியசைத்து தொடங்கி வைப்பார். எல்எச்பி பெட்டிகள் பொருத்தப்பட்ட இரண்டு புதிய ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
ஹூக்ளியில் பிரதமர்
ஹூக்ளியின் சிங்கூரில் ரூ. 830 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
கொல்கத்தாவில் ஒரு அதிநவீன மின்சார கட்டுமரப் படகினைப் பிரதமர் தொடங்கி வைப்பார். கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் உள்நாட்டு நீர் போக்குவரத்திற்காக உள்நாட்டிலேயே கட்டமைத்த 6 மின்சாரக் கட்டுமரப் படகுகளில் இதுவும் ஒன்றாகும். மேம்பட்ட மின்சாரம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்துடன் 50 பயணிகள் செல்லக்கூடியது இந்தக் கட்டுமரப் படகு.
ஜெயராம்பதி - பரோகோபிநாத்பூர் - மைனாபூர் புதிய ரயில் பாதையையும் பிரதமர் திறந்து வைப்பார். மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215249®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2215299)
आगंतुक पटल : 12