பிரதமர் அலுவலகம்
திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 9:24AM by PIB Chennai
திருவள்ளுவர் தினத்தையொட்டி, பன்முகத் திறமை கொண்ட அய்யன் திருவள்ளுவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காலத்தால் அழியாத அவரது படைப்புகளும், சிந்தனைகளும் தலைமுறை தலைமுறையாக ஏராளமான மக்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.
இன்றைய உலகிற்குப் பொருத்தமான மதிப்புகளுடன் கூடிய நல்லிணக்கம், கருணை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு சமூகத்தைத் திருவள்ளுவர் கற்பனை செய்தார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தியுள்ள திருவள்ளுவர், ஞானம் மற்றும் ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறார் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
புலவரும் துறவியுமான அவரது ஆழமான போதனைகளில் ஈடுபடுமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், தனித்தனியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். வள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215135®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2215226)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam