பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் பத்து ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்

இந்தியாவின் துடிப்பான புத்தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாட உள்ளார்

प्रविष्टि तिथि: 15 JAN 2026 8:50AM by PIB Chennai

தேசிய புத்தொழில் நிறுவன தினம் நாளை (16.01.2025) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜனவரி 16, 2026) பிற்பகல் 1 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் தொழில்முனைவோர் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இந்தியாவை வேலை தேடுபவர்களின் நாடாக இருப்பதற்குப் பதிலாக வேலையை உருவாக்குபவர்களின் நாடாக மாற்றும் நோக்கத்துடன் புதுமைகளை வளர்ப்பதற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டு வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், தேசிய திட்டமாக, ஸ்டார்ட்அப் இந்தியா, பிரதமரால் 2016 ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இந்தியாவின் பொருளாதார, புதுமைக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் புத்தொழில் நிறுவனங்கள் அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்துள்ளது. இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 2,00,000- க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி, பல்வேறு துறைகளில் உள்நாட்டு மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214764&reg=3&lang=1

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2214859) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam