பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படை வீரர்கள் தினத்தில் அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நாடு மரியாதை செலுத்துகிறது

முன்னாள் படைவீரர்கள் தேசிய உணர்வின் தூண்களாக திகழ்வதுடன் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகச் சின்னங்களாக விளங்குகின்றனர்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 14 JAN 2026 3:35PM by PIB Chennai

முன்னாள் படை வீரர்கள் தினம் இன்று (ஜனவரி 14, 2026) கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  முன்னாள் படைவீரர்கள் பங்கேற்ற பேரணிகள்உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள்குறை தீர்க்கும் முகாம்கள்  உள்ளிட்டவை நடைபெற்றன. தில்லி கான்டோன்மென்ட்டின் மானேக்ஷா மையத்தில் நடைபெற்றி முக்கிய நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் தில்லியைச் சேர்ந்த சுமார் 2,500 வீரர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜநாத் சிங்முன்னாள் படைவீரர்களின் வீரம்தியாகங்கள்அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர்களை தேசிய உணர்வின் தூண்கள் எனவும்எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகம் என்றும் அவர் கூறினார். தற்கால இளைஞர்களை தங்கள் அனுபவங்கள் மூலம் முன்னாள் படை மூலம் வீரர்கள் வழிநடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் படைவீரர்களின் அனுபவம்தலைமைத்துவம்மதிப்புகள் ஆகியவை நாட்டிற்கு விலைமதிப்பற்ற சொத்துக்கள் என அவர் குறிப்பிட்டார். நமது சமூகம்குறிப்பாக இளைஞர்கள்முன்னாள் படை வீரர்களிடமிருந்து அதிக அளவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். கல்விதிறன் மேம்பாடுபேரிடர் மேலாண்மைசமூகத் தலைமை போன்றவற்றில் முன்னாள் படை வீரர்களின் அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசுமுன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துரைத்தார். ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றியதுமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்துவது ஆகியவை சில உதாரணங்கள் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

 

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான்கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிவிமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங்முன்னாள் தளபதிகள் மற்றும் பிற முன்னாள் படை வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214529&reg=3&lang=1

***

TV/PLM/SE


(रिलीज़ आईडी: 2214705) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Malayalam