பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 14 JAN 2026 12:11PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (2026 ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். தமிழில் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, "பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது" என்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சமூகத்தினராலும்உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இந்தப் பண்டிகையை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார். தமிழர் வாழ்வில்பொங்கல் ஓர் இனிமையான அனுபவமாகும். பூமிக்கும்  சூரியனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில்இயற்கைகுடும்பம் மற்றும் சமூகத்தில் சமநிலையை நோக்கி நம்மை அது வழிநடத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில்நாட்டின் பல்வேறு பகுதிகளும் லோஹ்ரிமகர சங்கராந்திமாக் பிஹு மற்றும் பிற பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடுஅனைத்துப்  பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில்தமிழ்க் கலாச்சாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் கூறினார். வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் போதுகலாச்சார ஒற்றுமையின் ஆற்றலைத் தொடர்ந்து உணர்ந்ததாகவும்அதனுடன் இணைந்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். பாம்பன் ரயில் கடல் பாலத்  திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் சென்றபோதுதமிழ் வரலாற்றின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை கண்டதை  அவர் நினைவுகூர்ந்தார். தமிழ்க் கலாச்சாரம் முழு நாட்டிற்கும்உண்மையில்மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான பாரம்பரியம் என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடிதாம் அடிக்கடி கூறும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற  உணர்வு பொங்கல் போன்ற பண்டிகைகளால் மேலும் வலுப்பெறுகிறது என்றார்.

உலகில் உள்ள அனைத்து நாகரிகங்களும் வேளாண் பயிர்களுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். தமிழ்க் கலாச்சாரத்தில்வாழ்க்கையின் அடித்தளமாக விவசாயி கருதப்படுகிறார் என்பதை அவர் எடுத்துரைத்தார். திருக்குறளில் விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி விரிவான கருத்துகள் உள்ளன என்று திரு மோடி கூறினார். தேசக் கட்டமைப்பில் விவசாயிகள் வலுவான பங்குதாரர்கள் என்றும்அவர்களின் முயற்சிகள் தற்சார்பு இந்தியா திட்டத்திற்குப்  பெரும் பலத்தை அளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் மேம்பாட்டிற்குத் தொடர்ந்து பாடுபட மத்திய அரசு  உறுதிபூண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும்அங்கு தொழில்முறை வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு வயல்களில் பணியாற்றும் தமிழ் இளைஞர்களின் சிறந்த பணியைக் கண்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். நீடித்த விவசாயத்தில் புரட்சியைக் கொண்டுவருவதற்கான இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்துமாறு  விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளம் தமிழ் நண்பர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். நமது தட்டு நிரம்பியிருக்க வேண்டும்நமது பாக்கெட் நிரம்பியிருக்க வேண்டும்நமது பூமி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"தமிழ்க் கலாச்சாரம் உலகின் மிகவும் பழமையானவாழும் நாகரிகங்களில் ஒன்றாகும்" என்று திரு மோடி தெரிவித்தார். தமிழ்க் கலாச்சாரம் பல நூற்றாண்டுகளை ஒன்றிணைக்கிறதுவரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறதுநிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் ஈர்க்கப்பட்டுஇன்றைய இந்தியா அதன் வேர்களிலிருந்து வலிமையைப் பெற்று புதிய சாத்தியங்களை நோக்கி முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். புனிதமான பொங்கல் பண்டிகையில்தனது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டதனது நிலத்தை மதிக்கின்றதனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையால் நிறைந்த தேசமான இந்தியாவை முன்னோக்கி செலுத்தும் நம்பிக்கையை நாம் அனுபவிக்கிறோம். அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்து மீண்டும் ஒருமுறை பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர்தமிழில் வாழ்த்துகள் தெரிவித்து உரையை நிறைவுசெய்தார். 

புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகனின் இல்லத்தில் இந்தப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் திரு ஜி. கிஷன் ரெட்டிதிரு கே. ராம்மோகன் நாயுடுதிரு அர்ஜுன் ராம் மேக்வால்திரு வி. சோமண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214436&reg=3&lang=1


***

AD/SMB/PLM/SE


(रिलीज़ आईडी: 2214701) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam