ரெயில்வே அமைச்சகம்
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தை இணைக்கும் 'அமிர்த பாரத்' ரயில்கள் விரைவில் தொடக்கம்!
प्रविष्टि तिथि:
13 JAN 2026 8:02PM by PIB Chennai
புது தில்லி/குவஹாத்தி: இந்திய ரயில்வே சாமானிய மக்களுக்கான பயண அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் 9 புதிய அமிர்த பாரத் விரைவு ரயில்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய வழித்தடங்கள் மற்றும் இணைப்பு:
இந்த புதிய ரயில்கள் வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைத் தென்னிந்தியா, மேற்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களுடன் நேரடியாக இணைக்கின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு மூன்று முக்கிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன:
நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில்
நியூ ஜல்பைகுரி – திருச்சிராப்பள்ளி
கொல்கத்தா (சந்த்ராகாச்சி) – தாம்பரம்
மேலும், பின்வரும் முக்கிய வழித்தடங்களிலும் சேவைகள் தொடங்கப்படுகின்றன:
குவஹாத்தி (காமக்யா) – ரோஹ்தக்
திப்ருகர் – லக்னோ (கோமதி நகர்)
அலிபுர்துவார் – பெங்களூரு (SMVT)
அலிபுர்துவார் – மும்பை (பான்வெல்)
கொல்கத்தா (ஹவுரா) – ஆனந்த் விகார் (டெல்லி)
கொல்கத்தா (சீல்டா) – வாரணாசி (பனாரஸ்)
குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகள்:
குளிர்சாதன வசதி இல்லாத இந்த ரயில்களில், 1000 கிலோமீட்டருக்கு சுமார் ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்களும் சொகுசு வசதிகளைப் பெறும் வகையில் இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
மொபைல் சார்ஜிங் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசைகள் மற்றும் ரேடியம் தரைப்பட்டைகள், நவீன கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பாதுகாப்பிற்காகத் தீயணைப்பு கருவிகள் மற்றும் அதிவேகப் பயணத்தின் போது அதிர்வைக் குறைக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள் குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள் வழியாக இவை இயக்கப்படுவதால், பண்டிகை கால நெரிசலைத் தவிர்க்கவும் இது உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214291®=3&lang=1
(செய்தி வெளியீட்டு அடையாள எண் :2214291)
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2214341)
आगंतुक पटल : 13