விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 12 JAN 2026 2:20PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026- ற்கு முந்தைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகஇன்று புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அமர்வில்மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்  இளம் தலைவர்களிடையே கலந்துரையாடினார்.

இந்த உரையாடலின் போதுநவீன மற்றும் பசுமை பாரத்தை கட்டமைப்பதற்கான வழிமுறைகள்அது சார்ந்த சிந்தனைகள்கொள்கை அடிப்படையிலான முன்னெடுப்புகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து இளம் தலைவர்கள் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர். திறன்வாய்ந்த மற்றும் நீடித்த வேளாண் நடைமுறைகள் மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்பாரம்பரியத்துடன் புதுமை முயற்சிகளை இணைத்தல் ஆகியவை குறித்த சிந்தனைகளையும் இளம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகதேசத்தின் உள்ளார்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான தொலைநோக்கை அடைவதில்  பன்முகத்தன்மை வாய்ந்த சிந்தனைகள்இந்திய இளையோரின் தீர்வு காணும் திறன் ஆகியவை குறித்து டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் இளம் தலைவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்தேசத்தை கட்டமைக்க அனைவரது கூட்டுப்பொறுப்பும்குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் அவசியம் என்று வலியுறுத்தினார். நாட்டிற்கு சேவையாற்ற வாழ்வை அர்ப்பணிக்கும்போதுதான் நமது வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது என்றும் கூறினார். இளைஞர்கள் சிறந்த குறிக்கோள்களை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தலைமைப்பண்பை அடைய ஒழுக்கம்அர்ப்பணிப்புஉழைப்புகவனம்மனவலிமை ஆகிய பண்புகள் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை அடையும் பயணத்தில் இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்யபிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நமக்கு வழிகாட்டியாக திகழ்வதாகவும் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026 நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நிர்வாகம்கொள்கைகள் குறித்த விவாதங்களில் இளையோரை பங்கேற்கச் செய்வதை நோக்கமாக கொண்டுமை பாரத் தளத்தின் மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

***

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213706&reg=3&lang=1

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2213860) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada , Malayalam