இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடலின் 3-ம் நாளில் இஸ்ரோ விண்வெளி வீரர்களுடன் இளம் தலைவர்கள் உரையாடல்

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க போதைப் பொருள் ஒழிப்பு அவசியம் - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா

प्रविष्टि तिथि: 11 JAN 2026 7:04PM by PIB Chennai

மத்திய இளைஞர் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ச்சி அடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் மூன்றாம் நாள் நிகழ்வுகள், புதுதில்லி பாரத் மண்டபத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியாவின் ஊக்கமளிக்கும் உரை, இஸ்ரோ விண்வெளி வீரர்களுடனான கலந்துரையாடல் அமர்வு போன்றவை இன்று (11.01.2026) மூன்றாம் நாள் நிகழ்வுகளில் இடம்பெற்றன.

இளைஞர்களிடையே உரையாற்றிய திரு மன்சுக் மண்டவியா, இந்த நிகழ்வின் மூலம், இளைஞர்கள் மத்திய அரசுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்தார். உரையாடல் இந்த நிகழ்வோடு முடிவடையாது என்று கூறிய அவர், வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை யதார்த்தமாக மாற்றுவதற்கான பயணம் தொடரும் என்றார்.

இளம் தலைவர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய பிறகு, மை பாரத் தளத்தின் மூலம் தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு போதைப் பொருள் ஒழிப்பு அவசியம் என்று கூறிய அவர், போதைப்பொருள் புழக்கம் ஒரு கடுமையான சவாலாக உள்ளது என்றார். போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் இளம் தலைவர்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு உரையாடலாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, விண்வெளிப் பயணம் குறித்த தனது அனுபவங்களை இளம் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.  இந்திய இளைஞர்கள் "அச்சமற்ற மற்றும் வலிமையானவர்கள்" என்று கூறிய அவர், இளம் தலைவர்கள் உறுதியுடன் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், இந்தியாவின் விண்வெளி பயணங்களின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213460&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213489) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Gujarati , Urdu , हिन्दी , Kannada