பிரதமர் அலுவலகம்
இந்திய இளைஞர்களின் ஒப்பற்ற ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 8:20AM by PIB Chennai
இந்திய இளம் தலைமுறையினரின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வரவிருக்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் நாட்டின் இளைஞர்களுடன் உரையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒப்பற்ற ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய இந்தியாவின் இளைஞர்கள்தான் வலிமையான மற்றும் வளமான தேசத்தைக் கட்டமைப்பதற்கான உந்துசக்தி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த உரையாடல், நாடு முழுவதிலும் உள்ள இளம் தலைவர்கள் தங்கள் யோசனைகளையும் லட்சியங்களையும் பகிர்ந்துகொள்வதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு தளமாக அமையும்.
திரு மன்சுக் மாண்டவியாவின் எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"அற்புதமான உற்சாகத்தாலும், இணையற்ற ஆர்வத்தாலும் நிரம்பிய நமது இளைஞர் சக்தி, வலிமையான மற்றும் வளமான தேசத்திற்கு உறுதிபூண்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் எனது இளம் நண்பர்களுடன் கலந்துரையாட நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். ஜனவரி 12 அன்று இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கவிருக்கிறேன்."
(Release ID: 2213127)
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213195)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam