பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளைஞர் தினத்தையொட்டி, வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் நிறைவு அமர்வில் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் பங்கேற்கிறார்

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 இளம் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 10:00AM by PIB Chennai

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி, ஜனவரி 12-ம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் நிறைவு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 இளைஞர்களுடனும், சர்வதேச அளவிலான இளம் பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பத்து கருப்பொருள்களில் பிரதமரிடம் தங்கள் விளக்கங்களை வழங்குவார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய துறைகளில் இளைஞர்கள் தலைமையில் செயல்படுத்தக்கூடிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள், நீண்டகால அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் ஆகியவை குறித்து இளம் பங்கேற்பாளர்களால் எழுதப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை பிரதமர் வெளியிடுவார்.

தற்போது இரண்டாவது பதிப்பில் உள்ள வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல், இளைஞர்களுக்கும், தேசத்தின் தலைமைக்கும் இடையே கட்டமைக்கப்பட்ட ஈடுபாட்டை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய தளமாகும். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல், ஒரு லட்சம் இளைஞர்களை கட்சி சார்பு இல்லாமல் அரசியல் பயணத்தில் ஈடுபடுத்தி, வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த அவர்களின் கருத்துக்களை கேட்டு அதை நனவாக்குவதற்கு ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது. இது தொடர்பாக பிரதமரின் சுதந்திர தின அழைப்புக்கு ஏற்ப இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

2026 ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026, நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் பங்கேற்பைக் கண்டுள்ளது. தேசிய அளவிலான நிகழ்வில் ஒன்றிணைந்த இளம் தலைவர்கள், நாடு தழுவிய டிஜிட்டல் வினாடி வினா, கட்டுரைப் போட்டி, மாநில அளவிலான தொலைநோக்கு செயல்பாடுகள் உள்ளிட்ட கடுமையான, தகுதி அடிப்படையிலான மூன்று கட்ட தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

(Release ID: 2213133)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213194) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam