பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டிற்கான வருடாந்தர ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
09 JAN 2026 11:54AM by PIB Chennai
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் வளர்ச்சி, பாதுகாப்பு, நலன் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த அமைச்சகத்தால் செயல்பட்டு வரும் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டச்சத்துக் குறித்த கண்காணிப்பு அமைப்பில் இதுவரை 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து இயக்கத்தை திறம்பட மேற்கொள்வதற்கும் வளரிளம் பருவ பெண்களுக்கான ஊட்டச்சத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் காரணமாக 8.69 கோடிக்கும் அதிகமான கருவுற்ற பெண்கள், பாலூட்டும், வளரிளம் பருவப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயனடைந்துள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில் தரநிலையை உயர்த்தும் வகையில், 94,077 அங்கன்வாடி மையங்களில் எல்இடி திரைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 4.26 கோடி பெண்களுக்கு நேரடி பணப்பரிமாற்றத் மதிட்டத்தின் கீழ், 20,060 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக விருது பெற்றுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைவதில் சிறப்பாக செயல்பட்ட 1000 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடற்ற இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அங்கன்வாடி மையங்களை கற்றல் மையங்களாக உருவெடுக்கச் செய்யும் வகையில் அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2025 டிசம்பர் மாதத்திற்குள் 8,55,728 அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212747®=3&lang=1
-----
TV/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212816)
आगंतुक पटल : 13