ஜவுளித்துறை அமைச்சகம்
உலகளாவிய ஜவுளித்துறையின் மையமாக இந்தியாவை திகழச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது–மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 5:17PM by PIB Chennai
தேசிய அளவிலான ஜவுளித்துறை அமைச்சர்கள் மாநாடு அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியாவின் ஜவுளித் துறையின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஜவுளித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்துள்ளனர்.
மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, “இந்தியாவின் ஜவுளிகள்: நெசவு வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ஜவுளிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளில் உலகளாவிய மையமாக இந்தியாவை திகழச் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், கூட்டுறவு கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்த நிகழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இம்மாநாட்டில் தொடக்க உரையாற்றிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், உலகளாவிய ஜவுளித் துறையாக இந்தியாவை திகழச் செய்ய ஜவுளித்துறையை வலுப்படுத்துவதற்காக வலிமையான திட்டங்களை அமைப்பதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212507®=3&lang=1
****
TV/IR/SH
(रिलीज़ आईडी: 2212579)
आगंतुक पटल : 10