பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்திய அமைச்சர் கபிந்திர புர்கயஸ்தா மறைவு: பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 JAN 2026 7:07PM by PIB Chennai
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கபிந்திர புர்கயஸ்தா மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"முன்னாள் எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கபிந்திர புர்கயஸ்தா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சமூகத்திற்குச் சேவை செய்வதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
அசாம் மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி."
இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212180®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்: 2212180
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2212245)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam