ரெயில்வே அமைச்சகம்
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்திய ரயில்வே தனது மூலதனச் செலவில் 80 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
05 JAN 2026 5:11PM by PIB Chennai
இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் வேகமான, பாதுகாப்பான மற்றும் உலகத் தரம் வாய்ந்த ரயில் பயணத்தை வழங்கி வருகிறது. இந்த இலக்கு சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய ரயில்வே 2025-26 -ம் ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதில் வலுவான போக்கைப் பராமரித்து வருகிறது.
2025 டிசம்பர் இறுதி நிலவரப்படி, இந்திய ரயில்வே ரூ 2,52,200 கோடி மொத்த ஒதுக்கீட்டில் 80.54 சதவீதம், அதாவது ரூ 2,03,138 கோடியைச் செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (டிசம்பர் 2024) ஒப்பிடும்போது பயன்பாட்டில் 6.54 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்தச் செலவினம் முதன்மையாக பாதுகாப்பு நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், பயணிகளுக்கான வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான பணிகளின் பிரிவில், ஒதுக்கப்பட்ட நிதியில் 84 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது., ஒதுக்கப்பட்ட ரூ 1,09,238 கோடியில், ரூ 76,048 கோடி (69 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் வசதிகளில் 80 சதவீதப் பயன்பாடு காணப்படுகிறது, 2025 டிசம்பர் வரை ரூ 9,575 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியான மூலதனச் செலவினங்களின் முடிவுகள், 164 வந்தே பாரத் ரயில் சேவைகள், 30 அமிர்த பாரத் ரயில் சேவைகள், கவாச் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பின் அமலாக்கம், அகலப் பாதை வலையமைப்பில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மின்மயமாக்கல் மற்றும் புதிய பாதைகள், பாதை மாற்றுதல், இரட்டைப் பாதை அமைத்தல், போக்குவரத்து வசதிகள், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள், பெருநகரப் போக்குவரத்து அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பணிகளில் காணப்படுகிறது. இந்த முயற்சிகள் ரயில் பயணத்தை குறைந்த கட்டணத்தில் வைத்திருக்கும் அதே வேளையில், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்திய ரயில்வே நீண்ட தூர ரயில் பயணத்தை மாற்றியமைக்கத் தயாராக உள்ளது.
இந்தப் போக்குகள், ரயில்வே அமைச்சகத்தின் செலவினத் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்பதையும், உள்கட்டமைப்புப் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன. மேலும், 2025-26 நிதியாண்டிற்கான இலக்குகள் முழுமையாக அடையப்படும் என்பதையும் இவை உணர்த்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211554®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2211604)
आगंतुक पटल : 24