தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சம்பன்: டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மூலம் தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய நிர்வாகத்தை மாற்றியமைத்தல்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 3:58PM by PIB Chennai
சம்பன் (ஓய்வூதியக் கணக்கியல் மற்றும் மேலாண்மை அமைப்பு) என்பது தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த, ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பாகும், இது ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஓய்வூதியத்தை செயலாக்குதல், அனுமதித்தல் மற்றும் வழங்குவதற்கான ஒற்றைத் தளத்தை உருவாக்குகிறது.
இது ஆன்லைன் வழியே குறைதீர்த்தல், டிஜிட்டல் சுயவிவர மேலாண்மை மற்றும் பரிவர்த்தனை பதிவு, தொலைத்தொடர்பு ஓய்வு பெற்றவர்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது.
டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் காகிதமில்லா சேவைகள் பற்றிய அரசின் தொலைநோக்கு பார்வையை மேலும் மேம்படுத்துதல், ஓய்வூதியம் தொடர்பான முக்கியமான ஆவணங்கள் அதாவது பணிக்கொடை கட்டண ஆணைகள், ஓய்வூதியச் சான்றிதழ்கள், ஓய்வூதிய பரிமாற்ற கட்டண ஆணைகள் மற்றும் படிவம் 16 ஆகியவை இப்போது டிஜிலாக்கர் மூலம் கிடைக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு ஓய்வூதியதாரர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பாதுகாப்பாக அணுகவும், சேமிக்கவும், மீட்டெடுக்கவும் உதவுகிறது, அதிக வசதி, நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால டிஜிட்டல் பதிவுகளைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2211580)
आगंतुक पटल : 29