கலாசாரத்துறை அமைச்சகம்
புத்தமத தத்துவம் குறித்த குழு விவாதம் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
05 JAN 2026 9:43AM by PIB Chennai
புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் பிரம்மாண்ட சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், புத்த தத்துவம் குறித்த குழு விவாதம் புதுதில்லியில் உள்ள ராய்பித்தோரா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அமர்வுக்கு நாளந்தாவில் உள்ள நவ நாளந்தா மஹாவிஹராவின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேராசிரியர் சித்தார்த் சிங் தலைமை வகித்தார். லக்னோவில் உள்ள பாபா சாஹேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் நளின் குமார் சாஸ்திரி, தில்லி பல்கலைக்கழக தத்துவவியல் துறை பேராசிரியர் பால கணபதி, லக்னோவில் உள்ள பாபா சாஹேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த் சிங், புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமஸ்கிருத துறை பேராசிரியர் ரஜ்னீஷ் மிஸ்ரா உள்ளிட்ட பிரபல அறிஞர்கள் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்போது தலைமை உரையாற்றிய பேராசிரியர் சித்தார்த் சிங், உலகம் முழுவதும் புத்தரின் போதனைகள் வன்முறையாகவோ அல்லது கட்டாயமாகவோ பரப்பப்படாமல், உரையாடல், நன்னடத்தை, முன்மாதிரி ஆகியவற்றின் மூலம் பரப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.
மற்ற தர்மம் அடிப்படையிலான பாரம்பரியங்களைப் போலவே, புத்த மதமும் மதமாற்றமாக அல்லாமல், மனித சமூகத்தின் மனதை தூய்மைப்படுத்துவதையும் துன்பத்தை களைவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறினார்.
பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களை திரும்ப அனுப்புவது என்பது உரிமை கோருவது என்று அல்லாமல், பகிரப்பட்ட மேற்பார்வையின் ஒரு செயல் என்று அவர் குறிப்பிட்டார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211332®=3&lang=1
AD/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2211448)
आगंतुक पटल : 20