உள்துறை அமைச்சகம்
சாவித்திரிபாய் ஃபுலேவின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 JAN 2026 11:31AM by PIB Chennai
பெண் கல்வி, சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் முன்னோடியாகத் திகழ்ந்த சாவித்திரிபாய் ஃபுலேவின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மகளிரை கல்விக்கான அடிப்படை உரிமையுடன் இணைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கு ஒரு புதிய பாதையை சாவித்திரிபாய் ஃபுலே வகுத்தார். அவர் சமூக தீமைகளுக்கு எதிராகப் போராடினார். பெண்களுக்கான நாட்டின் முதல் பள்ளியை நிறுவினார். சமூக சீர்திருத்தத்தின் சுடரை ஏற்றினார். சாவித்திரிபாய் ஃபுலேவின் ஊக்கமளிக்கும் வாழ்க்கை, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எப்போதும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும்"
(Release ID: 2211009)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2211131)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam