பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

प्रविष्टि तिथि: 01 JAN 2026 6:35PM by PIB Chennai

வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை 111 உயர்த்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை மேற்கோள் காட்டி, வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை சந்தையால் தீர்மானிக்கப்படுவதாகவும், சர்வதேச அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. அதன்படி, வணிக எல்பிஜி விலைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், உலகளாவிய எல்பிஜி விலைகள் மற்றும் தொடர்புடைய செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.

வீடுகளுக்கான சமையல் எரிவாயுவின் நுகர்வோரைப் பாதுகாக்க, தில்லியில் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் பயனாளிகள் அல்லாத வீட்டு நுகர்வோருக்கு 950 விலையுள்ள 14.2 கிலோ சிலிண்டரின் விலை 853 ஆகவும், திட்டத்தின் பயனாளிகளுக்கு 553 ஆகவும் வழங்கப்படுகிறது.  ஆகஸ்ட் 2023-ல் 903 ஆக பதிவான விலை, 2025 நவம்பரில் 553 ஆகக் குறைந்துள்ளது.

2025–26 நிதியாண்டில், பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் நுகர்வோருக்கு ஆண்டுக்கு ஒன்பது மறு நிரப்பல்களுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு 300 மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை மலிவு விலையில் அணுகுவதை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துவதை இந்த நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றன.

2024–25-ம் ஆண்டில் சர்வதேச எல்பிஜி விலைகள் அதிகரித்து, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தன. எனினும் உலகளவில் நிலவும் விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து வீட்டு பயன்பாட்டிற்கான நுகர்வோரைப் பாதுகாக்க, செலவுகளின் அதிகரிப்பு வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலைகளுக்கு மாற்றப்படவில்லை. இதன் விளைவாக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (OMCs) 40,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதைச் சமாளிக்க, நிறுவனங்களுக்கு 30,000 கோடி இழப்பீட்டை வழங்க அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

வணிக ரீதியான எல்பிஜி விலைகள் சர்வதேச சந்தை நிலவரங்களை பிரதிபலிக்கும் அதே வேளையில், வீட்டு பயன்பாட்டிற்கான  நுகர்வோரை உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கவும், குறைந்த விலையை உறுதி செய்யவும், நாடு முழுவதும் சுத்தமான சமையல் மற்றும் போக்குவரத்து எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் அரசு தொடர்ந்து நிலையான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210560&reg=3&lang=1

***

AD/BR/RK


(रिलीज़ आईडी: 2210641) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam