பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பெருநிறுவன விவாகரங்கள் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகள்
प्रविष्टि तिथि:
01 JAN 2026 2:13PM by PIB Chennai
நாட்டில் உள்ள பெருநிறுவனங்களின் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டது.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அத்துறைக்கான மத்திய அமைச்சகம் மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக சிறு நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்திற்கான உச்சவரம்பு மற்றும் விற்பனை உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகள், ஒழுங்குமுறை நெறிமுறைகள், தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்முயற்சிகள் ஆகியவை காரணமாக இணக்க நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளதுடன் நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கையும் வலுப்படுத்தப்பட்டு வர்த்தகச் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் பெயர் பதிவு மற்றும் நீக்கம் தொடர்பான விதிமுறைகள் சட்டத்தின் கீழ் உரிய திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சட்டம் 2013-ன்படி வருடாந்தர கேஒய்சி புதுப்பிப்பு செயல்பாடுகள் 3 ஆண்டுக்கு ஒரு முறை என திருத்தியமைக்கப்பட்டள்ளது. நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ள ஏதுவாக சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 1,300 தீர்மானங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நலிவடைந்த நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் 3.99 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை மீட்கப்பட்டுள்ளது அதன் மதிப்பீட்டில் 170.9 சதவீதமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210429®=3&lang=1
***
AD/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2210580)
आगंतुक पटल : 9