ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடு

प्रविष्टि तिथि: 01 JAN 2026 11:19AM by PIB Chennai

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்துக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இத்திட்டததின் கீழ் இதுவரை 16,000 கிலோ மீட்டருக்கும் கூடுதலான கிராமப்புறச் சாலைகளும் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

தீன் தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ், செயல்படும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2 கோடி லட்சாதிபதி சகோதரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வறுமையைக் களையும் வகையிலும் ஏழைக் குடும்பங்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கும் இத்திட்டம் வகை செய்கிறது.

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 3,86,000 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு அவற்றில் 2,92,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 4.71 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு அதில் 2.42 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ், 82,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு 37,000 இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மேலும் 59 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு 43 லட்சம் பேருக்கு 625 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஆண்டுதோறும் 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210378&reg=3&lang=1

***

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2210488) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam