நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் அமைப்புகள் தொடர்பான தரநிலையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 28 DEC 2025 2:57PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் தின நிகழ்ச்சியில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, வெடிகுண்டுகளை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பையும் தரப்படுத்தலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய தரநிலையான ஐஎஸ் 19445:2025 என்ற குறியீட்டுடன் கூடிய வெடிகுண்டு அகற்றும் அமைப்புகளுக்கான செயல்திறன் மதிப்பீட்டையும் தேவைகளையும் வெளியிட்டார்.

அத்தகைய அமைப்புகளின் செயல்திறன் மதிப்பீட்டிற்கான பிரத்யேக இந்திய தரநிலை இதுவரை இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஅர்டிஓ ஆகியவற்றின் கோரிக்கையைத் தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையிலும், சிவில் ஏஜென்சிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். வெடிகுண்டு அகற்றும் அமைப்புகள் பொதுவாக வெடிக்கும் அபாயத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பல பொது, தனியார் துறை நிறுவனங்கள் இந்த அமைப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்தாலும், அவற்றின் பாதுகாப்பான, பயனுள்ள களப் பயன்பாட்டிற்கு கடுமையான, தரப்படுத்தப்பட்ட செயல்திறன் மதிப்பீடு தேவைப்படுகிறதுஎனவே ஐஎஸ் 19445:2025 தரக் குறியீடு, வெடிகுண்டு அகற்றும் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.

ஐஎஸ் 19445:2025- உருவாக்கும் போது, சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட்டது. இது இந்திய சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது. இந்த அணுகுமுறை இந்திய தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் உலகளாவிய சீரமைப்பை ஊக்குவித்து, சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் இந்திய உற்பத்தியாளர்களை ஆதரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209191&reg=3&lang=1

***

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2209238) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi