பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தலைசிறந்த மனிதரான பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா - ஜி அவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 25 DEC 2025 8:41AM by PIB Chennai

தலைசிறந்த மனிதரான பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தாய் நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக அர்பணித்துக் கொண்டவர் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். "அடிமைத்தளையை தகர்க்கும் வகையில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுடன் இணைந்து தேசிய உணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஒருபோதும் மறக்க முடியாதது," என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தலைசிறந்த மனிதரான பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி, இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தாய் நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக அர்பணித்துக் கொண்டவர். "அடிமைத்தளையை தகர்க்கும் வகையில், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுடன் இணைந்து தேசிய உணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். நாட்டின் கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஒருபோதும் மறக்க முடியாதது,".

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208346&reg=3&lang=1          

***

AD/SV/RK


(रिलीज़ आईडी: 2208624) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam