ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.
प्रविष्टि तिथि:
24 DEC 2025 7:36PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார். தேசிய அளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், நாடு முழுவதும் 622 மாவட்டங்களின் 4,912 தொகுதிகளில் உள்ள 2,55,407 கிராமங்களில் இருந்து 35,29,049 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க சட்டம், 2025 இன் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதும், சமூகத்தின் பார்வையைப் புரிந்துகொள்வதும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாக இருந்தது.
இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சவுகான், வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க சட்டம், 2025, இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டமாகக் கருதப்படுவதாகக் கூறினார். இது நிலையான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், மீள்தன்மை கொண்ட கிராமங்களை உருவாக்குவதற்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தின் கீழ் பயனாளிகளில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க சட்டம், 2025-ன் கீழ் சுய உதவிக் குழுக்களின் ஈடுபாடு வலுவான உள்ளூர் பங்கேற்பு மற்றும் சமூக உரிமையை உறுதி செய்வதில் முக்கியமானது என்று இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி வலியுறுத்தினார்.
இந்தச் சட்டத்தின் முக்கிய விதிகளை எடுத்துரைத்த இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர் பாதுகாப்பு மற்றும் கால்நடை சார்ந்த வாழ்வாதாரங்கள் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், இதன் மூலம் கிராமப்புற வருமானம் மற்றும் நிலையான வளர்ச்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208255®=3&lang=2
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2208338)
आगंतुक पटल : 7