குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
24 DEC 2025 4:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிக்கந்தர் குமார் எழுதிய மோடியின் சகாப்தத்தில், பொருளாதார அதிகாரமளித்தல் என்ற நூலை புதுதில்லியில் இன்று குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகக் கூறினார். உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாக பயனாளிகளை சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நேரடி பணப்பரிமாற்றங்கள் முறைகேடுகளைக் குறைத்துள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 47 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டமைப்பு மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் கூறினார். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முன்முயற்சிகள் தொழில்முனைவோருக்கும், சிறு வணிகர்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நடைபோடுவதாக அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208124®=3&lang=1
----
TV/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208223)
आगंतुक पटल : 10