பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உத்தரப்பிரதேசம் பயணம்
அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
24 DEC 2025 11:05AM by PIB Chennai
மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த தினமான நாளை (25.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார். இந்த தேசிய நினைவிடம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்களது தத்துவங்களையும், சித்தாத்தங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
65 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம் தேச சேவை, தலைமைத்துவ பண்பு, கலாச்சார உணர்வு, ஆகியவற்றை எடுத்துரைக்கும் சின்னமாக அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அடல் பிகாரி வாஜ்பாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரது 65 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 98,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நவீன அருங்காட்சியகத்தையும் இந்த வளாகம் கொண்டுள்ளது. சிறந்த தலைமைத்துவம், நல்லாட்சி ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த தேசிய நினைவிடம் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208004®=3&lang=1
***
VT/PLM/KPG/KR
(रिलीज़ आईडी: 2208041)
आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam