பிரதமர் அலுவலகம்
நியூசிலாந்து பிரதமருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
இந்தியா - நியூசிலாந்து இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு தலைவர்களும் கூட்டாக அறிவிப்பு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 11:30AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனுடன் இன்று உரையாடினார். இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, பரஸ்பரம் பயனளிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து, இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
கடந்த மார்ச் 2025-ல் அந்நாட்டுப் பிரதமர் திரு லக்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 9 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டது, இருநாட்டு குறிக்கோள்களை பிரதிபலிப்பதுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவிடும் என இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள், மேம்பட்ட சந்தை வாய்ப்புகள், முதலீடுகளுக்கான உத்வேகம், வலுவான உத்திசார் ஒத்துழைப்பு போன்றவற்றுக்கு வகை செய்கிறது. புதுமை கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர்கள், விவசாயிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க இது உதவுகிறது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வலுவான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய அடித்தளத்தை அமைக்க உதவுகிறது. அடுதத் 5 ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கும், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நியுசிலாந்தில் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு, கல்வி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது எனவும், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு நாடுகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
***
Ref ID: 2207299
SS/SV/LDN/RK
(रिलीज़ आईडी: 2207332)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam