இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் முதலாம் ஆண்டு நிறைவு விழா - புதுச்சேரியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா தலைமையில் மிதிவண்டி பேரணி
प्रविष्टि तिथि:
21 DEC 2025 2:33PM by PIB Chennai
புதுச்சேரியில் இன்று (21.12.2025) நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா பங்கேற்றார். கடந்த ஒரு ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாகவும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
புதுச்சேரி கடற்கரையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர். செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மன்சுக் மண்டவியா, உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடத்தப்படுவதாகவும், இது ஒரு சாதாரணமான தொடக்கமாக அமைந்து, இப்போது நாடுதழுவிய மக்கள் இயக்கமாக வெற்றியடைந்துள்ளது என்றும் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியில் 1500-க்கும் அதிகமானோர் அமைச்சருடன் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர். பிரபல விளையாட்டு வீரர்களான பி.ஆர். ஸ்ரீஜேஷ், ஷரத் கமல், ஜோதி சுரேகா, அபிஷேக் வர்மா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2207165)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207212)
आगंतुक पटल : 11