தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆகாஷ்வாணி 591 ஒலிபரப்பு நிலையங்களை இயக்கி, நாடு முழுவதும் வானொலி சென்றடைதலை விரிவுபடுத்துயுள்ளது

प्रविष्टि तिथि: 18 DEC 2025 12:50PM by PIB Chennai

தற்போதுஆகாஷ்வாணியின் 591 ஒலிபரப்பு நிலையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 230 நிலையங்களில் அசல் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புவதற்கான ஸ்டுடியோ வசதி உள்ளது.

மீதமுள்ள 361 நிலையங்கள்ஒலிபரப்பை மேம்படுத்துவதற்காக மற்ற ஆகாஷ்வாணி மையங்களின்  நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்கின்றன.

இந்த ஒலிபரப்பு நிலையங்களின் மாநில வாரியான விவரங்கள் https://prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.

பில்வாராவில் உள்ள ஒரு 100 வாட் எப்எம் மறுஒலிபரப்பு நிலையம் (28.04.2023 அன்று மறுஒலிபரப்பு நிலையமாகத் தொடங்கப்பட்டது) விவித் பாரதி சேவையை மறுஒலிபரப்பு செய்கிறது.

ஆகாஷ்வாணி உதய்பூரில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புவதற்கான ஸ்டுடியோ வசதிகள் உள்ளன. இது விவித் பாரதி சேவையில்  ஒரு உள்ளூர் சாளரத்தில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.

ஆகாஷ்வாணி பில்வாரா உட்பட பிரசார் பாரதியின் மறுஒலிபரப்பு நிலையங்கள்மற்ற ஆகாஷ்வாணி நிலையங்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதையும்பொது ஒலிபரப்பின் பரந்த மக்கள் தொடர்பையும் உறுதிசெய்துஅதன் மூலம் நிகழ்ச்சிகளின் தரத்தைப் பராமரிக்கிறது.

இந்தத் தகவலை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் 17-12-25 அன்று மக்களவையில் தெரிவித்தார்.

Release ID: 2205751

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2206310) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR , Punjabi , Telugu , Kannada