தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் பதிவுத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களை பதிவு செய்துகொள்ள தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் அழைப்பு
प्रविष्टि तिथि:
18 DEC 2025 12:48PM by PIB Chennai
தொழிலாளர் வைப்பு நிதித் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், எவ்வித சிரமுமின்றி எளிதாக தங்களது தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், இது குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொண்டு பயனடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதித்திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாநில அரசு நிர்வாகத்தையும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி, சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்ள ஏதுவாக நவம்பர் 2025 முதல் 6 மாத காலத்திற்கு சிறப்பு நடைமுறைகளுக்கான சாளரம் செயல்படும் என்றும் தகுதியுள்ள தொழிலாளர்கள் அதாவது, 2017 ஜூலை 1-ம் தேதி முதல் 2025 அக்டோபர் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205749®=3&lang=1
***
SS/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2206163)
आगंतुक पटल : 10