தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மென்மை சக்தி மற்றும் உலகளாவிய கலாச்சார வெளிப்பாட்டின் முக்கிய இயக்கியாக ஓடிடி தளம் வெளிப்படுகிறது.

प्रविष्टि तिथि: 17 DEC 2025 3:55PM by PIB Chennai

இந்தியக் கதைகள்படைப்புத் திறமைகலாச்சார பாரம்பரியம் மற்றும் சுதந்திரத் திரைப்படத் தயாரிப்பு ஆகியவற்றை உலக அளவில் அணுக அனுமதிப்பதன் மூலம்இந்தியாவின் மென்மையான சக்திக்கு ஓடிடி தளம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி (ஃபிக்கி-எர்னஸ்ட் &யங் மீடியா என்டர்டெயின்மென்ட் இண்டஸ்ட்ரி ரிப்போர்ட் 2025), 2024-ல் வீடியோ சந்தா வருவாய் 11% அதிகரித்து ரூ. 9,200 கோடியை எட்டியது.

பொது ஒளிபரப்பாளர் தளமான வேவ்ஸ் ஓடிடிதூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் வளமான ஆவணக் காப்பகங்கள்பிராந்திய கலைகள்ஆவணப்படங்கள்பாரம்பரிய இசைஇலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள்பன்மொழி உள்ளடக்கம் ஆகியவற்றை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் இந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்தத் தளம் தற்போது வளர்ச்சி மற்றும் விரிவாக்க கட்டத்தில் உள்ளதுசர்வதேச பயனர் தடம் சீராக அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தைகளிலிருந்து வருவாய் ஓட்டங்கள்உத்திசார் கூட்டாண்மைகள் மூலம் படிப்படியாக இந்தத் தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே 80 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் பயனர் வளர்ச்சி குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய போக்கைக் காட்டியுள்ளது. இது டிஜிட்டல் தளங்களில் பன்மொழி இந்திய உள்ளடக்கம் மற்றும் பொது சேவை ஊடகங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பிரதிபலிக்கிறது.

மத்திய தகவல்ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205233&reg=3&lang=2

***

AD/SMB/SE


(रिलीज़ आईडी: 2205659) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Telugu , Kannada , Malayalam