வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நாட்டின் எரிசக்தித் துறை வளர்ச்சியடைந்துள்ளது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
15 DEC 2025 2:27PM by PIB Chennai
துணிச்சல் மிக்க தொலைநோக்குப் பார்வை, நேர்மையான நோக்கம், அயராத செயல்பாடு, நாட்டின் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது இந்திய எரிசக்தித் துறையின் கடந்த 11 ஆண்டுகால பயணத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சர்தார் படேல்-ஐ நினைவில் கொள்வது மட்டுமின்றி அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் உத்திசார்ந்த வகையில், நாடு சுயமாக திகழ வேண்டும் என்ற அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாக அவர் நினைவு கூரப்படுவதாக தெரிவித்தார். இது போன்ற தற்சார்பு, உத்வேகம் இந்தியாவின் எரிசக்தித் துறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2024-25-ம் நிதியாண்டின் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 1,048 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. அதே வேளையில் நிலக்கரி இறக்குமதி சுமார் 8 சதவீதம் குறைந்தது. இந்தியாவின் சூரிய மின்சக்தித் திறன் 46 மடங்கு அதிகரித்து, உலகின் 3-வது மிகப் பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் நாடாக இருந்தது என்று அவர் கூறினார். காற்றாலை மின் சக்தித் திறன் 2014-ம் ஆண்டில் 21 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு 53 ஜிகாவாட்டாக அதிகரித்தது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204027®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2204270)
आगंतुक पटल : 13