ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீனமயமாக்கலில் மகத்தான முயற்சி: ரயில்வே 11 ஆண்டுகளில் 42,600-க்கும் அதிகமான எல்ஹெச்பி பெட்டிகளைத் தயாரித்துள்ளது

प्रविष्टि तिथि: 14 DEC 2025 4:04PM by PIB Chennai

பயணிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு, மேம்பட்ட பயண வசதி, சிறந்த செயல்பாட்டு செயல்திறன் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட லிங்க்கே ஹாஃப்மேன் புஷ் எனப்படும் எல்ஹெச்பி  பெட்டிகளின் உற்பத்தியில் ரயில்வே சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டான 2025-26-ல் (நவம்பர் 2025 வரை), மொத்தம் 4,224-க்கும் மேற்பட்ட எல்ஹெச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 3,590 பெட்டிகளை விட 18% கூடுதலாகும். இது ரயில்வேயில், உற்பத்தித் திறன் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதையும், மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திட்டமிடலையும் பிரதிபலிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலை வாரியான செயல்திறனைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை 1,659 எல்ஹெச்பி ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ரேபரேலியில் உள்ள மாடர்ன் ரயில் பெட்டி தொழிற்சாலை 1,234 ரயில் பெட்டிகளையும்  கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை 1,331 ரயில் பெட்டிகளையும் உற்பத்தி செய்துள்ளன.

 2014-2025-ம் ஆண்டுகளுக்கு இடையில்ரயில்வே 42,600-க்கும் மேற்பட்ட எல்ஹெச்பி பெட்டிகளை உற்பத்தி செய்தது. 2004- 2014-ம் ஆண்டுக்கு இடையிலான 10 ஆண்டுகளில் 2,300 எல்ஹெச்பி பெட்டிகளே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த வளர்ச்சி ரயில்வே துறையை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203714&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203783) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada