ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே மின்மயமாக்கல் நிறைவடையும் தருவாயில் உள்ளது - தூய்மையான, வேகமான பயணிகள் போக்குவரத்து உறுதி செய்யப்படுகிறது

प्रविष्टि तिथि: 14 DEC 2025 4:29PM by PIB Chennai

ரயில்வே தனது முழு அகலப்பாதை கட்டமைப்பின் மின்மயமாக்கலை முடிக்கும் தருவாயில் உள்ளது. 99%-க்கும் அதிகமான பாதைகள் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மின்மயமாக்கல் பணிகளின் வேகம் அசாதாரணமாக அதிகரித்துள்ளது. 2019-2025-ம் ஆண்டுகளுக்கு இடையில், 33,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் மட்டும் மின்மயமாக்கப்பட்ட மொத்த தூரம் ஜெர்மனியின் முழு ரயில் கட்டமைப்பிற்கும் சமம்.

இந்தியாவின் அகல ரயில் பாதை கட்டமைப்பு, 25 மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களில் 99.2 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் கட்டமைப்புகளில் ஒன்றான இந்தியா, கிட்டத்தட்ட அதன் முழு அகல ரயில் பாதை அமைப்பையும் மின்மயமாக்கியுள்ளது.

இந்த மாற்றம் டீசல் பயன்பாடு, உமிழ்வு, செயல்பாட்டுச் செலவுகள் என அனைத்தையும் குறைத்துள்ளது. அத்துடன் ரயில்களின் செயல்திறனையும் வேகத்தையும் மேம்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203715&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203780) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada