சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா சாஹேப் தர்கா, 814-வது உர்ஸுக்கு தயாராகிறது

प्रविष्टि तिथि: 13 DEC 2025 3:18PM by PIB Chennai

ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா சாஹேப் தர்காவின்  814-வது உர்ஸ் டிசம்பர் 17 -ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறுபான்மை விவகார அமைச்சகம் இன்று அஜ்மீரில் ஒரு கூட்டத்தை நடத்தியதுஇந்த நிகழ்வை சுமூகமாகவும் அமைதியாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பின் அவசியத்தை அமைச்சக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

கூட்டத்தின் போது, முக்கிய  இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், போதுமான குடிநீர் மற்றும் கழிப்பறைகளை வழங்குதல், வாகன நிறுத்துமிட வசதிகள், சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பராமரித்தல், பயனுள்ள கூட்ட மேலாண்மை ஆகிய  முக்கிய ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துறைகள் முழுமையாக தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203473&reg=3&lang=1

***

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2203547) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi