பிரதமர் அலுவலகம்
75-வது பிறந்தநாள் எனும் சிறப்புத் தருணத்தை முன்னிட்டு திரு ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 DEC 2025 8:59AM by PIB Chennai
75-வது பிறந்தநாள் எனும் சிறப்புத் தருணத்தை முன்னிட்டு திரு ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
திரு ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு பல தலைமுறை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகவும், பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பாத்திரங்கள், வகைமைகள் மற்றும் சினிமா பாணிகளைக் கொண்ட அவரது பாராட்டத்தக்க படைப்புகள் இந்திய சினிமாவில் தொடர்ந்து புதிய முத்திரைகள் பதித்து வருவதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
திரைப்பட உலகில் திரு ரஜினிகாந்த் 50 சிறப்புமிக்க ஆண்டுகளை நிறைவு செய்வதால், இந்த ஆண்டு தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இது அவரது நீடித்த செல்வாக்கையும், துறைக்கு அவர் அளித்த ஈடிணையற்ற பங்களிப்பையும் பிரதிபலிக்கும் ஒரு மைல்கல் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். திரு ரஜினிகாந்தின் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்காக அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2202694)
SS/SMB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2202827)
வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada