குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாளில், குடியரசு துணைத் தலைவர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 1:51PM by PIB Chennai
புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு தினமான இன்று (11.12.2025), குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கம்பீரமான குரலும், இந்திய பாரம்பரிய இசைக்கு அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பும் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு நிலைத்த அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன என்று கூறியுள்ளார். தனது பக்தியின் மூலமும் கலைச் சிறப்பின் மூலமும், அவர் கர்நாடக இசையை உலகளாவிய தளத்திற்கு உயர்த்தினார் எனவும் பல தலைமுறை அவர் இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தி இருப்பதாகவும் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
காலத்தால் அழியாத அவரது மரபு இசை உலகத்தை தூய்மை, கண்ணியம், ஆழ்ந்த கலை ஆழம் ஆகியவற்றுடன் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2202183)
AD/PLM /KR
(रिलीज़ आईडी: 2202357)
आगंतुक पटल : 13