ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் சக்தி ஹேக்கத்தான் - 2025 இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கான ஒரு தேசிய இயக்கம்: மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 5:15PM by PIB Chennai

ஜல் சக்தி ஹேக்கத்தான் - 2025 என்பது போட்டி மட்டுமின்றி, அது இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கான ஒரு தேசிய இயக்கம் என்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில், 'ஜல் சக்தி ஹேக்கத்தான் - 2025' மற்றும் பாரத்-வின் என்ற இணையதளத்தையும் அவர் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த முயற்சி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவின் நீர்வளத் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை  மத்திய அரசு மேற்கொள்வதற்கு உதவிடும் என்று கூறினார்.

இந்தியாவிற்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நீர் ஆதாரத்திற்கான எதிர்காலத்தை உருவாக்க, அனைத்து தரப்பினரின் கூட்டுத் திறமைகளைத் திரட்டுவதற்காக "நீர்வள தொலைநோக்குப் பார்வை @ 2047" வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200932&reg=3&lang=1

(Release ID:2200932)

***

AD/SV/SH


(रिलीज़ आईडी: 2201163) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati