குடியரசுத் தலைவர் செயலகம்
கைவினைஞர்களுக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 2:19PM by PIB Chennai
2023,2024-ம் ஆண்டிற்கான தேசிய கைவினைஞர்கள் விருதை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கைவினைப் பொருட்கள் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளம் மட்டுமின்றி, வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாகவும் திகழ்கிறது என்று கூறினார். நாட்டில் இத்துறையில் 3.2 மில்லியனுக்கும் மேலான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். கைவினைப் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டக்கூடிய மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ள பெரும்பாலான மக்கள் ஊரகப்பகுதி அல்லது கடைக்கோடி பகுதிகளில் வசிப்பதாக அவர் கூறினார். கைவினைப் பொருட்கள் துறைக்கு ஊக்கமளிப்பது, சமூக அதிகாரமளித்தலுக்கு மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். எளிய மக்களுக்கு இத்துறை பாரம்பரியமாக ஆதரவு அளித்து வருவதாக அவர் கூறினார். கைவினைத்துறை கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மட்டுமின்றி, அவர்களுடைய கலைக்கு சமூகத்தில் அங்கீகாரமும், கௌரவமும் கிடைக்கச் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். இத்துறையின் வளர்ச்சி மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அவர் கூறினார். இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் 68 சதவீதம் மகளிர் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது, உலக நாடுகளில் அப்பொருட்களுக்கான அடையாளத்தை வலுப்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200792®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201006)
आगंतुक पटल : 20