தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிடி இலவச டிஷ் தளத்தில் பிரபலமான மாநில அலைவரிசைகளை சேர்க்க சோதனை முயற்சியைத் தொடங்கும் பிரசார் பாரதி

प्रविष्टि तिथि: 28 NOV 2025 7:26PM by PIB Chennai

பிரசார் பாரதி தனது டிடி இலவச டிஷ் தளத்தில் பிரபலமான மாநில மொழி அலைவரிசைகளை சேர்க்கும் ஒரு சோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன் முக்கிய நோக்கம், அணுகல் மற்றும் விழிப்புணர்வில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதாகும்.கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் போன்ற குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், மாநில செய்தி அலைவரிசைகளுக்கும் முன்னுரிமை உண்டு. இந்தச் சேனல்கள் மார்ச் 31, 2026 வரை சோதனை அடிப்படையில் இலவசமாக ஒளிபரப்பப்படும்.

கட்டணம் இல்லாத இந்த டிடி இலவச டிஷ் தளமானது சுமார் 65 மில்லியன் வீடுகளை சென்றடையும் மிகப்பெரிய டிடிஎச் தளமாகும். இதன்மூலம், தொலைதூரப் பகுதிகளுக்கும் தரமான தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கை வழங்கி பொதுச் சேவை ஒளிபரப்பு நோக்கத்தை பிரசார் பாரதி நிறைவேற்றுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196028&reg=3&lang=1        

***

SS/VK/RK


(रिलीज़ आईडी: 2200823) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Kannada , Malayalam