நார்வேயின் "சேஃப் ஹவுஸ்" திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் யுனேஸ்கோ காந்தி விருதை வென்றது
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், நார்வேயின் "சேஃப் ஹவுஸ்" (இயக்குநர்: ஈரிக் ஸ்வென்ஸன்) திரைப்படம் மதிப்புமிக்க ஐசிஎஃப்டி யுனேஸ்கோ காந்தி விருதை வென்றது. அமைதி, வன்முறையற்ற தன்மை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திரைப்படங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில், 2013 உள்நாட்டு போரின் பின்னணியில் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இத்திரைப்படம், போர்க்களத்தில் மனிதாபிமானம், தைரியம், மற்றும் பொறுப்பின் நெறிமுறைகளை ஆராய்கிறது. இக்கட்டான சூழ்நிலைகளிலும் தார்மீக தைரியம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளை சக்திவாய்ந்த முறையில் சித்தரித்ததற்காக நடுவர் குழு இதை வெகுவாகப் பாராட்டியது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து வழங்கப்படும் இந்த விருதை, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் மாக்தம் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196062®=3&lang=1
***
SS/VK/RK
रिलीज़ आईडी:
2200785
| Visitor Counter:
6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Manipuri
,
Malayalam
,
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Konkani
,
हिन्दी
,
Gujarati
,
Kannada