சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது- மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 2:46PM by PIB Chennai
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடர்ந்து விவாதித்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக சுற்றுலா காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தில்லி, கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் சுற்றுலா காவல்துறையினரை மத்திய சுற்றுலா அமைச்சகம் ஈடுபடுத்தி உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் குறைகள் மற்றும் கருத்துகளை, மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளம் மூலம் பெறுகிறது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் வாயிலாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் புகார்களை பதிவு செய்ய முடியும்.
1800111363 அல்லது 1363 என்ற இலவச உதவி எண் மூலம் 10 சர்வதேச மொழிகள் உட்பட 12 மொழிகளில் சுற்றுலாப் பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200328®=3&lang=1
***
SS/IR/LDN/RK
(रिलीज़ आईडी: 2200526)
आगंतुक पटल : 7