பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேசன் சாகர் பந்து - இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 11:00AM by PIB Chennai
இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு 57 ஆகிய நான்கு கப்பல்களை அனுப்பியுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் சுகன்யா ஆகியவை முன்னர் நிவாரண உதவி மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆதரவை வழங்கியிருந்தன.
மூன்று எல்சியு-க்கள் டிசம்பர் 07, 2025 அன்று காலை கொழும்பு வந்து, முக்கியமான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தன. மனிதாபிமான உதவிப் பணியைத் தொடர ஐஎன்எஸ் கரியல் கப்பல் டிசம்பர் 08 அன்று திருகோணமலைக்கு வர உள்ளது.
1000 டன் பொருட்களை உதவிக்காக வழங்குவதன் மூலம், இந்தக் கப்பல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவுகளையும், நமது அண்டை நாடுகளுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200316®=3&lang=1
***
SS/PVK/RK
(रिलीज़ आईडी: 2200479)
आगंतुक पटल : 12