மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பரீட்சைக்கு பயமேன் நிகழ்வின் 9-வது பதிப்பு 2026 ஜனவரியில் நடைபெறுகிறது - மைகவ் தளத்தில் ஜனவரி 11 வரை பதிவு செய்யலாம்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 12:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சியான பரிக்ஷா பே சர்ச்சா (பிபிசி) எனப்படும் பரீட்சைக்கு பயமேன் நிகழ்வின் 9-வது ஆண்டு நிகழ்ச்சி 2026 ஜனவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து தேர்வு அழுத்தத்தைப் பற்றி விவாதித்து, தேர்வுகளை உற்சவமாகவும் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாற்றுவது குறித்து கலந்துரையாடலாம்.
பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, மைகவ் தளத்தில் ( https://innovateindia1.mygov.in/ ) 2025 டிசம்பர் 1 முதல் 2026 ஜனவரி 11 வரை இணையதள போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறும் அனைத்து பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களும் மைகவ் தளத்தில் பங்கேற்புச் சான்றிதழைப் பெறுவார்கள்.
2025-ம் ஆண்டில், பரிக்ஷா பே சர்ச்சா ஒரு குறிப்பிடத்தக்க கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது. 245-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், 153 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், 149 நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்களின் பங்கேற்பை அது பெற்றது. இந்த நிகழ்ச்சி 2018-ம் ஆண்டில் முதல் பதிப்பில் வெறும் 22,000 பங்கேற்பாளர்களில் இருந்து 2025-ம் ஆண்டில் 8-வது பதிப்பில் 3.56 கோடி பதிவுகளாக அசாதாரண வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தொடர்பான நாடு தழுவிய நடவடிக்கைகளில் 1.55 கோடி மக்கள் பங்கேற்றனர். இதன் மொத்த பங்கேற்பு கிட்டத்தட்ட 5 கோடியாக இருந்தது.
***
(Release ID: 2199754)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2199781)
आगंतुक पटल : 8