ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமான ரத்துகளால் ஏற்படும் பயண இடையூறுகளைக் குறைக்க, 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 05 DEC 2025 9:09PM by PIB Chennai

பரவலான விமான ரத்துகளைத் தொடர்ந்து பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே, வலையமைப்பு முழுவதும் சீரான பயணம் மற்றும் போதுமான தங்குமிட வசதிகளை உறுதி செய்ய விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மொத்தம் 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் 114-க்கும் மேற்பட்ட கூடுதல் பயணங்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே அதிக எண்ணிக்கையிலான விரிவாக்கங்களை மேற்கொண்டுள்ளது. இது 18 ரயில்களின் திறனை அதிகரித்துள்ளது. அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. டிசம்பர் 6, 2025 முதல் செயல்படுத்தப்படவுள்ள  இந்த அதிகரிப்புகள், தெற்கு பிராந்தியத்தில் தங்குமிட திறனை கணிசமாக விரிவுபடுத்துகின்றன.

வடக்கு ரயில்வே எட்டு ரயில்களில் 3 ஏசி  மற்றும் சேர் கார் பெட்டிகளைச் சேர்த்து, தொடர்ந்து விரிவாக்கங்களைச் செய்துள்ளது. இன்று முதல் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், அதிக அளவில் பயணம் மேற்கொள்ளப்படும் வடக்கு வழித்தடங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மேற்கு ரயில்வே 3 ஏசி  மற்றும் 2 ஏசி  பெட்டிகளைச் சேர்த்து நான்கு அதிக தேவை உள்ள ரயில்களின் சேவைகளை அதிகரிக்கவுள்ளது. டிசம்பர் 6, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த அதிகரிப்புகள், மேற்குப் பகுதிகளிலிருந்து தேசிய தலைநகருக்கு வலுவான பயணிகள் போக்குவரத்தை பூர்த்தி செய்கின்றன.

கிழக்கு ரயில்வே மூன்று முக்கிய ரயில்களில் விரிவாக்கங்களைச் செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 7-8, 2025 அன்று ஆறு பயணங்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளைச் சேர்க்கவிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199669&reg=3&lang=1

(Release ID: 2199669)

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2199691) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Odia , Kannada , Malayalam