ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 1673.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

प्रविष्टि तिथि: 05 DEC 2025 2:31PM by PIB Chennai

கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். கவாச் என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த அமைப்பாகும்.

லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் தவறும் பட்சத்தில் தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ரயில்களை இயக்க கவாச் உதவுகிறது. மோசமான வானிலையின் போது ரயில்களைப் பாதுகாப்பாக இயக்கவும் இது உதவுகிறது.

கவாச் தொழில் நுட்பத்தின் 4-வது பதிப்பு ரயில் என்ஜின்களில் படிப்படியாக நிறுவப்பட்டு வருகிறது.  சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க கவாச் குறித்த சிறப்பு பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் கவாச் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.

2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி 2,354.36 கோடி ரூபாயாகும். 2025-26-ம் ஆண்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு 1673.19 கோடியாகும்.

இந்தத் தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199327&reg=3&lang=1

----

SS/PLM/KPG/SH


(रिलीज़ आईडी: 2199628) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada