பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 5:55PM by PIB Chennai

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமது சட்டத் தொழிலை பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் இளைய வயதுடைய ஆளுநராக திகழ்ந்தார் என்றும் தமது பதவிக் காலத்தில் மிசோரம் மக்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றவாதியாக இருந்த அவருடைய நுண்ணறிவும் குறிப்பிடத்தக்கவை என்று திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஸ்வராஜ் கௌஷல் அவர்களின் மறைவு கவலையளிக்கிறது. அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமது சட்டத் தொழிலை பயன்படுத்தினார். அவர் நாட்டின் இளைய வயதுடைய ஆளுநராக திகழ்ந்தார், தமது பதவிக் காலத்தில் மிசோரம் மக்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்றவாதியாக இருந்த அவருடைய நுண்ணறிவும் குறிப்பிடத்தக்கவை. இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவருடைய மகள் பன்சூரியுடனும் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி.”

(Release ID: 2198880)

****

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2199128) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu