பிரதமர் அலுவலகம்
சர்வதேச சிறுத்தைகள் தினத்தையொட்டி வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 DEC 2025 9:43AM by PIB Chennai
சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று (04.12.2025), சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அற்புதமான விலங்கைப் பாதுகாப்பதற்கும், அது செழித்து வளரக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் மத்திய அரசு சிறுத்தைகள் திட்டத்தைத் தொடங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். இழந்த சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நமது பல்லுயிர் சூழலை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த முயற்சியாகும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நமது பூமியில் மிகவும் குறிப்பிடத்தக்க உயிரினங்களில் ஒன்றான சிறுத்தையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும், வனவிலங்கு பாதுகாவலர்களுக்கும் சர்வதேச சிறுத்தைகள் தினத்தில் எனது நல்வாழ்த்துகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அற்புதமான விலங்கைப் பாதுகாப்பதற்கும், அது செழித்து வளரக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதற்கும் மத்திய அரசு சிறுத்தைகள் திட்டத்தைத் தொடங்கியது. இழந்த சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நமது பல்லுயிர் சூழலை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த முயற்சியாகும்."
(Release ID: 2198561)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2198724)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam