குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

प्रविष्टि तिथि: 03 DEC 2025 2:15PM by PIB Chennai

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிமாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருது 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025, டிசம்பர் 03) புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்மாற்றுத்திறனாளிகள் சமமான தகுதியுடையவர்கள் என்று கூறினார்.

சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய சமமான பங்களிப்பை உறுதி செய்வதை தொண்டு சார்ந்த அம்சமாக இன்றிசம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் சமமான பங்கேற்புடன் மட்டுமே ஒரு சமூகம் உண்மையாக வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அடிப்படையிலானகண்ணியத்தை மையமாகக் கொண்ட சூழலை ஏற்றுக்கொள்வது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளை இணைப்பது நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய கண்ணியம் அளிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198084&reg=3&lang=1  

***

AD/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2198457) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam